திருமதி பெ. அன்னலெட்சுமி
Overview
- மலர்வு : 1941-09-09
- உதிர்வு : 2022-11-27
- பிறந்த இடம் : மஸ்கெலியா (பூர்வீகம்: திருச்சி புத்தனாம்பட்டிக் கிராமம்)
- வாழ்ந்த இடம் : மஸ்கெலியா
Description
திருச்சி புத்தனாம்பட்டிக் கிராமத்தை பூர்வீக இடமாகவும் மஸ்கெலியா இல. 122, பிரதான வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் சி.த.பெரியசாமிபிள்ளை அவர்களின் அன்பு மனைவி பெ. அன்னலெட்சுமி அவர்கள் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் பெ. செல்வராஜ் (முன்னாள் தூதுவர், மேலதிக செயலாளர் (ஓய்வு நிலை), வெளிவிவகார அமைச்சு), பெ.ஜெகதீஸ்வரன் (P.J.TEX கொழும்பு), பெ.லோகேஸ்வரன்( அதிபர், கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலை, நாவலப்பிட்டி), பெ.பத்மநாதன் (அப்பலோ எண்டர்பிரைசஸ்), பெ.ரமேஸ் (M.L.T கிளங்கன் ஆதார வைத்தியசாலை), பெ. பரமேஸ்வரி, பெ. சகுந்தலா தேவி ஆகியோரின் தாயாரும்,
அமரர் ம.சந்திரசேகரன், எஸ்.சோமசுந்தரம் ஆகியோரின் மாமியும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் ஜெயரட்ண மலர்ச்சாலையில் (NEW PARLOUR B) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 28.11.2022 இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த துயரில்
மகன்மார், மகள்மார், மருமகன்மார், மருமகள்மார், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்.
தகவல்
பெ.லோகேஸ்வரன் (மகன்)
தொடர்புகளுக்கு
பெ.லோகேஸ்வரன் (மகன்)
0777 296523 / 0772486179
No Comments on திருமதி பெ. அன்னலெட்சுமி