திரு சின்னத்தம்பி சிவராசா (சிவா)
Overview
- மலர்வு : 1948-07-07
- உதிர்வு : 2022-11-29
- பிறந்த இடம் : சுருவில்
- வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், வெள்ளவத்தை
Description
திரு சின்னத்தம்பி சிவராசா (சிவா)
(முன்னாள் மெனிக் பாம் முகாமையாளர் – இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுப்பினர்)
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் பிரவுன் வீதி மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவராசா அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சின்னத்தம்பி(வாலாம்பிகை) பொன்னாச்சி தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை(மஹோ செல்லையா) கற்பகம்(அருளம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருஷ்ணாதேவி(அனுசா) அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா(பிரித்தானியா), யசீவன்(பிரான்ஸ்), பிரியசர்மிளா(பிரித்தானியா) காலஞ்சென்ற பிரியதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயகிருஸ்ணன்(பிரித்தானியா), ஹேமப்பிரியா(இலங்கை), குருபரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகரட்ணம்(பிரான்ஸ்), விஜயலட்சுமி, சிவானந்தன், சிவராஜினிதேவி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை(சேவியர்), காலஞ்சென்ற நீலமேகநாதன்(விஷ்னு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுஸ், சகித், அச்சுதன், அக்சரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-12-2022 வெள்ளிக்கிழமை முதல் 03-12-2022 சனிக்கிழமை வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 08:30 மணிவரை MahindaFlorists, 591 Galle Road, Dehiwala, Mount Lavinia, Colombo எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும், 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
சி.யசீவன் – மகன்
+94774248888
No Comments on திரு சின்னத்தம்பி சிவராசா (சிவா)